×

டிஜி யாத்ரா முறை அமல் : கையைவீசியபடி விமானத்தில் ஏறலாம்

* டிஜி யாத்ரா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதன் படி, விமான நிலையங்களில் உள்ளூர் விமான பயணத்தை சுலபமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* டிஜி யாத்ரா வெப்சைட்டில் டிஜி யாத்ரா ஐடியை பயணிகள் பதிவு செய்து பெற வேண்டும்.

* ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உட்பட்ட சான்றுகள் மூலம் பதிவு செய்யலாம்.

* இந்த எண் கிடைத்தவுடன், அதை ஒவ்வொரு பயணத்தின் போதும் டிக்கட் முன்பதிவு செய்யும் போது குறிப்பிட வேண்டும்.

*முதன் முறை மட்டும் விமான நிலைய அதிகாரிகள் பரிசோதிப்பர். அதன் பின், பயணங்களில், கையை வீசியபடி விமானத்தில் ஏறலாம்.

மும்பை: விமான நிலையத்தில் நுழைந்ததும் ஒரு கையில் விமான டிக்கட், இன்னொரு கையில் அடையாள அட்டை  என்று பரபரக்க வேண்டாம் இனி. டிஜி யாத்ரா முறையில் எல்லாமே டிஜிட்டல் தான். நீங்கள் விமான நிலையத்தில் ஹாயாக கையை வீசிக்கொண்டு நுழையலாம். உங்களுக்காக தரப்பட்ட எண்ணை சொன்னால் போதும். டிஜிட்டல் டிக்கட் உங்கள் மொபைலில் இருக்கும். நீங்கள் கையை வீசிக்கொண்டு விமானத்தில் ஏற கேட்டில் நுழையலாம். முகத்தை அடையாளம் கண்டு அனுமதிக்கும் ‘பயோமெட்ரிக்’ முறை அமலுக்கு வருகிறது. இந்த நவீன ஹைடெக் முறை, ஐதராபாத், பெங்களூரு விமான நிலையங்களில் அமலுக்கு வருகிறது. அடுத்த கட்டமாக மூன்று மாதங்களுக்குள் வாரணாசி, ெகால்கத்தா, விஜயவாடா விமான நிலையங்களில் அமலுக்கு வருகிறது.

உள்நாட்டு விமானங்களில் ஏற மட்டும் இப்போது இந்த டிஜி யாத்ரா வசதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணத்துக்கு இந்த டிஜி யாத்ரா  முறை அமலாகாது. ஒன்றுக்கு மேற்பட்ட, வெளிநாடுகளிலும் டிக்கட்டை காட்ட வேண்டும் என்பதால் இந்த முறை அமலுக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருக்கிறது. இந்த ஐந்து விமான நிலையங்களை தவிர, சென்னை உட்பட மற்ற விமான நிலையங்களில் அடுத்தடுத்த மாதங்களில்  அமலுக்கு வரும் என்று விமான கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yatra ,Digi ,Amal , Digi Yatra, Adhar, Voter ID, Passport
× RELATED தமிழகம் வரும் ராம நவமி யாத்திரை குழு...