×

இந்தியாவின் பொருளாதாரம் இந்தாண்டு 7.5 சதவீதம் உயரும் ... சர்வதேச நிதியம் தகவல்

வாஷிங்டன்: இந்தியாவின் பொருளாதாரம் சரிகிறது என்று எழும் விமர்சனங்களுக்கு இடையே, சரியவில்லை, வேகமாக வளருகிறது என்று சொல்கிறது சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) அமைப்பு. வாஷிங்டனில் ஐஎம்எப் ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றி ஒரு கணிப்பு அறிக்கை வெளியிடும். இப்போது வெளியிட்ட  அறிக்கையில் கூறியிருப்பதாவது:   முன்னணியில் உள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் போது, வரும் ஆண்டுகளில் இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சி தொடர்ந்து வேகமாக அதிகரிக்கும். குறிப்பாக சொன்னால், சீனாவை விட முதன் முறையாக இந்தியா ெபாருளாதார வளர்ச்சியை காணும் என்பதில் சந்தேகம் இல்லை.   இந்தாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும். அடுத்தாண்டு இது 7.7 சதவீதமாக உயரும். இந்த இரண்டு ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி வேகத்தை விட, இந்தியா ஒரு சதவீதம் அதிகரித்து இருக்கும்.
இந்தியாவை ஒப்பிடும் போது, சீனாவின் பொருளாதார வளர்ச்சி தளர்ச்சியாக தான் உள்ளது. கடந்த 2017ல் 6.9 சதவீதமாக இருந்த வளர்ச்சி, கடந்தாண்டு 6.6 சதவீதமாக சரிந்தது. வரும் 2019 மற்றும் 2020ல் இதன் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.2 ஆக வெகுவாக குறையும் என்று கணிக்கப்படுகிறது.

பிரிட்டனை பின்தள்ளும்
சமீபத்தில் குளோபல் எகனாமிக் வாட்ச் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை பிடபிள்யுசி என்ற சர்வதேச அமைப்பு (பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்) வெளியிட்ட அறிக்கையில், சீனாவை மிஞ்சும் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம், பிரிட்டனை கூட மிஞ்சி விடும் என்று கூறியிருந்தது. இப்போது ஐஎம்எப் அமைப்பும் உறுதி செய்துள்ளது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ள திருப்தியான நிலை, மத்தியில் புதிய அரசு அமரும் போது தெரியவரும். சர்வதேச அளவில் பெரிய அளவில் வர்த்தக பதற்றம் இல்லாத பட்சத்தில் இந்த கணிப்பு கண்டிப்பாக பொய்க்காது’ என்றும் கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India , Indian economy, international finance, growth
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!