×

பகுஜனுடன் கூட்டணி சரியான வியூகம்தான் - அகிலேஷ் யாதவ் கருத்து

கொல்கத்தா: ‘‘உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாடி கூட்டணி அமைத்திருப்பது சரியான வியூகம்தான்’’ என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், பாஜ.விடம் தோல்வியை தழுவின. இந்நிலையில், மக்களவை தேர்தலுக்காக சமாஜ்வாடி -  பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில், காங்கிரஸ் சேர்க்கப்படவில்லை. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் எம்பி.க்களாக உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இக்கட்சிகள் போட்டியிடவில்லை. இந்த கூட்டணியில் சேர்க்காமல் கழற்றி விடப்பட்டதால், 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கூட்டணி தொடர்பாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: உத்தரப் பிரதேசத்தில் பாஜ இப்போது வைத்துள்ள தொகுதிகளை அடுத்த தேர்தலில் கைப்பற்றி விட்டால், அதற்கு பெரும்பான்மை கிடைக்காது. கடந்த தேர்தலில் எனது அரசியல் கணக்கை சரியாக போடாததால்தான் தோல்வியை தழுவினேன். எனவே, சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்து அந்த கணக்கை சரி செய்து விட்ேடன். காங்கிரசுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம். உபி.யில்  பாஜ.வை தோற்கடிக்கவே, சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளன. இது சரியான வியூகம்தான். காங்கிரசுடன் இணைந்து பணியாற்றுவோமா என்பதற்கு இப்போது பதில் கூற முடியாது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coalition ,Agnives ,Akhilesh Yadav , Bahujan Samaj, Samajwadi coalition, Akhilesh Yadav's opinion
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை