×

சில்லி பாயின்ட்...

* இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடர் மற்றும் இருதரப்பு ஒருநாள் தொடர்களைக் கைப்பற்றி சாதனை  படைத்ததை அடுத்து, தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், உறுப்பினர்கள் திவாங் காந்தி, ஜதின் பரஞ்ஜபி, ககன் கோடா, சரண்தீப் சிங் ஆகியோருக்கு தலா ₹20  லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

* ‘நியூசிலாந்து மைதானங்களில் 300 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. நம்பிக்கையுடன் சேஸ் செய்தால் நிச்சயம்  வெற்றி பெறலாம்’ என்று இந்திய அணி கேப்டன் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* பிக் பாஷ் டி20 தொடரில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை நேற்று வீழ்த்தியது. மெல்போர்ன் 20 ஓவரில் 9 விக்கெட்  இழப்புக்கு 152 ரன் (கேப்டன் பிஞ்ச் 54, கூப்பர் 22, கேமரான் ஒயிட் 40); சிட்னி தண்டர் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன் (பெர்குசன் 52, ஜேசன் சங்கா 54*,  லென்டான் 20*).

* போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பெயின் நாட்டில் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதில்  இருந்து தப்பினாலும், ₹30 கோடி அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு நியூசி. வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் கடும் சவாலாக விளங்குவார் என்று முன்னாள் வீரர் டியான் நாஷ்  கணித்துள்ளார்.

* டர்பனில் தென் ஆப்ரிக்க அணியுடன் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 45.5 ஓவரில் 203 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஹசன் அலி  அதிகபட்சமாக 59 ரன் எடுத்தார். கேப்டன் சர்பராஸ் 41, பகார் 26, சோயிப் மாலிக் 21, ஷதாப் கான் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.  தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் பெலுக்வாயோ 4, ஷம்சி 3, ரபாடா 2, ஒலிவியர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Roulette point
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...