×

3 ஐசிசி விருதுகள் அள்ளினார் விராத் கோஹ்லி: இரு அணி கேப்டனாகவும் தேர்வு

துபாய்: ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர் என 3 ஐசிசி விருதுகளை வென்று  இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி அபார சாதனை படைத்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2018ம் ஆண்டுக்கான ஐசிசி  விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்திய அணி கேப்டன் கோஹ்லி ஆண்டின் சிறந்த வீரர் விருதை தொடர்ந்து 2வது முறையாக வென்றதுடன், டெஸ்ட் மற்றும்  ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராகவும் விருதுகளை அள்ளினார்.

ஒரே சீசனில் இந்த மூன்று விருதுகளையும் பெற்ற முதல் வீரர் என்ற சாதனை கோஹ்லி வசமாகி உள்ளது. இது தவிர ஐசிசி டெஸ்ட் அணி மற்றும் ஐசிசி ஒருநாள்  அணிகளின் கேப்டனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் கோஹ்லி விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளில் 1,322 ரன்  (சராசரி 55.08), 14 ஒருநாள் போட்டிகளில் 1202 ரன் (சராசரி 133.55, சதம் 6), 10 டி20 போட்டியில் 211 ரன் எடுத்துள்ளார். அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்ட கோஹ்லி தேர்வுக் குழுவினரின் ஒருமனதான தேர்வாக விருதுகளை அள்ளி இந்தியாவுக்கு பெருமை  சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் சிறந்த வளரும் வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். இந்திய வேகம்  ஜஸ்பிரித் பூம்ரா டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Virat Kohli , 3 ICC,Awards, Virat Kohli
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...