×

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி : ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என உத்தரவிடக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிபந்தனைகளுடன்  இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு கொடுக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி வழங்கவும், வேதாந்தா நிறுவனம் சம்மந்தப்பட்ட துறைகளிடம் விண்ணப்பித்தது. ஆனால் அனுமதி அளிக்காததால் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மின் இணைப்பு அளிக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கவும், உத்தரவிட மனுவில் கோரிக்கை விடப்பட்டது. இந்த மனு வரும் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vedanta Company ,plant ,Sterlite , Sterlite, power connection, Vedanta Institute, Supreme Court, filed
× RELATED ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ரூ.401 கோடி நன்கொடை..!!