×

தமிழகத்துக்கு 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம்.... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகத்துக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஸ்மார்ட்  ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்று வழங்கும் திட்டத்தை, திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரப் பேருந்துகள், 12 ஆயிரம் பி.எஸ்-6 பேருந்துகளை  வாங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.  


சில நாட்களுக்கு முன்னதாக பேரவையில் பேசிய கவர்னர், ஜெர்மன் வங்கியின் உதவியுடன் போக்குவரத்து கழகங்களை மறுசீரமைக்க ஒரு விரிவான திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. அதன்படி, பழைய பேருந்துகளுக்கு பதிலாக எரிபொருள் செயல்திறன் மிக்க பி.எஸ்-6  பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மாநகரங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகளும் இத்திட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wijepabaskar ,Tamilnadu , 2,000 buses , Tamilnadu,Minister Wijepabaskar
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு