×

நியூசிலாந்துக்கு கள்ளத்தனமாக படகில் சென்ற தமிழர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மாயம்

திருவனந்தபுரம் : கேரளாவின் முன்னம்பம் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு படகு வழியாக  சென்ற 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி 12-ம் தேதி முன்னம்பம் துறைமுகத்திலிருந்து கள்ளத்தனமாக நியூசிலாந்துக்கு பயணம் செய்வது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது அந்த பிரமாண்ட மீன்பிடி படகு புறப்பட்டு சென்ற பகுதியில் இருந்து 70 பைகள் மீட்கப்பட்டன. அந்த பைகளில் நீண்ட தூரத்துக்கு பயணம் செய்வதற்கான அத்தியாவசிய பொருட்கள் இருந்தன. மேலும் 20 அடையாள ஆவணங்களும் அந்த பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன.

இந்த பயணத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலானோர்  தமிழர்கள் என்பது மேலும் அதிர்ச்சியடைய வைக்கின்றது. மேலும் அதை வைத்து விசாரணை நடத்திய கேரள போலீசார், கடந்த 19-ம் தேதி  தெற்கு டெல்லியைச் சேர்ந்த பிரபு என்ற 29 வயது தமிழ் இளைஞரை கைது செய்துள்ளனர். பின்னர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பெண்கள், குழந்தைகளும் அந்த படகில் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். கடந்த 12-ம் தேதி இரவு புறப்பட்ட அந்த படகு நடுக்கடலுக்கு சென்றது. அதன் பிறகு அந்த படகு மாயமாகி விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் அந்த படகில் சென்ற தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamils ,New Zealand , Missing' Boat,Indian Migrants,New Zealand
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!