×

ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஆஜராகிறார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், ஜெயலலிதாவின் பணியாளர்கள், சசிகலா தரப்பினர், அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையை நடத்தியது.

இதுவரையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது. இதில் சிலர் மீண்டும் வரவழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்னர் முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதன் அடிப்படையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜரானார். நேற்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜரான நிலையில் தம்பிதுரை இன்று ஆஜரானார். ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட சம்மன் அடிப்படையில் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராக இருந்த நிலையில் அலுவல்கள் காரணமாக அதனை ஒத்திவைக்க அவர் தரப்பில் கோரப்பட்டிருந்தது. அதையடுத்து அவர் வரும் 29-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : O. Panneerselvam ,29th Arumugamasi Commission , Arumugasamy Commission, appearing, O. Panneerselvam
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்