×

ரஷ்ய கடல் பகுதியில் சென்ற இரு கப்பல்களில் தீ விபத்து: 11 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்ய கடல் பகுதியில் இந்தியர்களுடன் சென்ற இரு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா - கிரிமியா இடையேயான கெர்ச் நீரிணையில் தான்சானியக் கொடிகளுடன் நேற்று இரண்டு கப்பல்கள் சென்றன. கேண்டி என்ற பெயர் கொண்ட  8 பேர் இந்தியர்கள், 8 துருக்கி நாட்டைச்சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். தி மேஸ்ட்ரோ என்ற கப்பலில் 15 பேர்  இருந்துள்ளனர். அவர்களில் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர். இந்தியாவை சேர்ந்தவர்கள் 7 பேர். இதேபோன்று லிபியா, ரஷ்யாவை சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.

அப்போது ஒரு கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட திரவ எரிவாயு, நடுக்கடலில் டாங்கர் கப்பலான மற்றொரு கப்பலுக்கு மாற்றப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து ரஷிய மீட்பு படையினர் விரைந்து சென்றனர். 2 கப்பல்களிலும் சென்ற 31 பேரில் இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். அதில் 11 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரணமாக நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Russian Sea , The Russian sea, the two vessels, the fire and the 11 people killed
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...