×

ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் கேப்டனாக விராட் கோலி நியமனம்

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐசிசி டெஸ்ட் அணியில் விராட் கோலியிடன் இந்திய வீரர்களான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் வேக பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் நியூசிலாந்து அணியில் இருந்து 3 வீரர்கள் ஐசிசி டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஐசிசி ஒருநாள் அணியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேக பந்துவீச்சாளர் பும்ரா இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணியிலிருந்து கேப்டன் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் வாக்களிப்பு அடிப்படையில் ஐசிசி வாக்கெடுப்பு அகாடமி வீரர்களை தேர்ந்தெடுக்கின்றன. 2018-ம் ஆண்டு விராட் கோலி 13 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 1,322 ரன்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 55.08. 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் ஆறு சதங்கள் உட்பட 1,202 ரன்கள் எடுத்துள்ளார். 2018-ல் ஒருநாள் போட்டியில் அவரது சராசரி 133.55. மேலும் ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும், ஒருநாள் தரவரிசையில் 2-ம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

இந்த ஆண்டின் ஐசிசி ஆண்கள் டெஸ்ட் அணி: டாம் லதாம் (நியூசிலாந்து), கருணாரத்னே (இலங்கை), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), விராட் கோலி (இந்தியா), ஹென்றி நிக்கோல்ஸ் (நியூசிலாந்து), ரிஷப் பண்ட் (இந்தியா) ஜேசன் ஹோல்டர் (மே.இ.தீவுகள்) காகிசோ ரபடா (தென் ஆப்ரிக்கா), நாதன் லயன் (ஆஸ்திரேலியா), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), முகமது அபாஸ் (பாகிஸ்தான்)

இந்த ஆண்டின் ஐசிசி ஆண்கள் ஒருநாள் அணி: ரோஹித் ஷர்மா (இந்தியா), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), விராட் கோலி (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), ரோஸ் டெய்லர் (நியூசிலாந்து), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து),, முஸ்தாபிஜூர் ரஹ்மான் (பங்களாதேஷ்), ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ் (இந்தியா), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Virat Kohli ,teams ,ICC Test , Virat Kohli,appointed,ICC,Test,One Day,teams,captain
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...