×

போஸ்டல் ஹாக்கி: தமிழகம் வெற்றி

சென்னை: அகில இந்திய அஞ்சல் வட்டங்களுக்கு இடையிலான ஹாக்கி தொடரில், தமிழ்நாடு அணி முதல் ஆட்டத்தில் அபாரமாக வென்றது. அஞ்சல் துறை வட்டங்களுக்கு இடையிலான 32வது அகில இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. அஞ்சல் துறை செயலாளர் ஏ.என்.நந்தா தலைமை விருந்தினராக பங்கேற்று போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.

சென்னை ஹாக்கி சங்கத் தலைவர் வி.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  ஏ பிரிவில் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் அணிகளும், பி பிரிவில் கர்நாடகா, ஒரிசா, மத்திய பிரதேச அணிகளும் இடம் பெற்றுள்ளன. எழும்பூர் ஹாக்கி விளையாட்டரங்கில் 25ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த முதல் போட்டியில் தமிழ்நாடு - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் தமிழகம் 5-3 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : win ,Tamil Nadu , Postel,hockey,Tamil Nadu,win
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...