×

பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 31ம் தேதி வரை ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது, என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவடியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் ரயிலும், சூலுர்பேட்டையில் இருந்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு  மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் மின்சார ரயிலும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் வரை இயக்கப்படும் மின்சார ரயிலும், நெல்லூரில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு  சூலூர்பேட்டை வரை இயக்கப்படும் மின்சார ரயிலும், மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரை இயக்கப்படும் மின்சார ரயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு ஆவடி சென்றடையும் ரயிலும் இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ரயில் ஓடூருக்கு காலை 11 மணிக்கு சென்றடையும், அதைப்போன்று சூலூர்பேட்டையில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு புறப்படும் ரயில் சூலூர்பேட்டைக்கு 3.55 மணிக்கு வந்தடையும், மேலும் ஓடூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் சூலூர்பேட்டைக்கு மாலை 6.35 மணிக்கு வந்தடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trains,canceled,maintenance,work,
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...