×

டாஸ்மாக் கடைகள் 26ம் தேதி மூடல் கலெக்டர் அறிவிப்பு

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 26ம் தேதி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று சென்னை கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 26ம் தேதி (சனிக்கிழமை) தமிழ்நாடு மதுபானம் (சில்லரை விற்பனை) விதிகளின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்எல் 3 (ஏஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Closet Collector ,Tasmax Stores , tasmac,shops,Closure,December,Collector,Notice
× RELATED டாஸ்மாக் கடைகள் 26ம் தேதி மூடல் கலெக்டர் அறிவிப்பு