×

வடசென்னையில் கொலை, கொள்ளை அதிகரிப்பு குற்றச் சம்பவங்களை தடுக்க முடியாமல் போலீஸ் திணறல்: பொதுமக்கள் அச்சம்

பெரம்பூர்: வடசென்னை பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள், சிம்ம சொப்பணமாக விளங்குவதால் போலீசார் திணறி வருகின்றனர். வடசென்னையில் சமீப காலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், பொது இடங்களில் மக்கள் நடமாட அச்சப்படும் நிலை உள்ளது. ஆனால், குற்றச் சம்பவங்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.  
வியாசர்பாடி சர்மா நகர் எஸ்ஏ காலனி 8வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (23). வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர், திடீரென மணிகண்டனை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

புகாரின்படி எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவத்தை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதேபோல், சென்னை ஓட்டேரியில் பைக்கில் வந்த ரவுடி தினேஷ் (எ) அப்பு, புளியந்தோப்பில் ரவுடி குமரன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். பொது இடங்களில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் வியாசர்பாடி, சர்மா நகர், தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்பட வடசென்னையின் பல பகுதிகளில் கொலை, கொலை முயற்சி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர். ஆனால், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,robbery ,civilians , murder,robbery,North Chennai,increased,police,prevent,criminal,civilians,fear
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...