×

சிவகாசி அருகே பரபரப்பு : வேலையில்லாததால் பட்டாசு ஆலை பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

சிவகாசி:  சிவகாசி அருகே வேலையில்லாததால் பட்டாசு ஆலை பெண் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, முருகன் காலனியை சேர்ந்தவர் சுகுணாவேணி (52). கணவர் இறந்து விட்டார். பிள்ளைகள் திருமணம் முடிந்து வெளியூரில் உள்ளனர். தனியாக இருக்கும் சுகுணாவேணி பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த 2 மாதமாக பட்டாசு ஆலைகள் பூட்டிக் கிடப்பதால், சுகுணாவேணி மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கினார். வேலையில்லாததால், கடனை கட்ட முடியவில்லை. இதனால் மனம் உடைந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு  முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சுகுணாதேவி கூறுகையில், ‘‘பிள்ளைகள் திருமணம் முடித்து வெளியூரில் உள்ளனர். கணவர் இல்லை. நான் பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்தேன். வாரம் 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 2 மாதமாக வேலையில்லாததால் செலவிற்கு பணம் இல்லை. மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கியிருந்தேன். அந்த கடனை கட்ட முடியவில்லை. இதனால், தற்கொலைக்கு முயன்றேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivakasi , Sivakasi, suicide attempt, no job
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து