×

40 அடி கிணற்றில் விழுந்து தத்தளித்த குட்டி யானை : 8 மணி நேரம் போராடி மீட்பு

புளியங்குடி: நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே 40 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்த குட்டி யானையை 8 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வனத்துறையினர் மீட்டனர்.நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள யானைகள், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குட்டிகளுக்கு தேவையான உணவுக்காகவும், கொசுத்தொல்லையிலிருந்து தப்பிக்கவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கிறது.

தற்போது புளியங்குடி வனச்சரகத்தில் பட்டமலை, தெள்ளுப்புளி, தலையணை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் பகல் நேரங்களில் வனப்பகுதியில் தங்கி விட்டு இரவு நேரங்களில் அருகில் உள்ள வயல்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.இந்நிலையில் காடுவெட்டி பறம்பு தென்புறம் புளியங்குடியைச் சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய 4 வயது குட்டி ஆண் யானை விழுந்தது. 40 அடி ஆழமுள்ள கிணற்றில் 12 அடி தண்ணீர் இருந்ததால் யானை வெளியேற முடியாமல் தத்தளித்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் கிணற்றின் பக்கவாட்டில் குழிதோண்டியும், கயிறு கட்டியும், குட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப்பிறகு குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். வெளியே வந்ததும் அந்த யானை வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The baby elephant,40 feet
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...