×

தலைமை செயலருக்கு எதிரான வழக்கில் ஆவணங்கள் தாக்கல் : ஐகோர்ட் மதுரை கிளையில் வருமான வரித்துறை சமர்ப்பிப்பு

மதுரை: குட்கா வழக்கின் ரகசிய கடிதம் மறைக்கப்பட்டதாக கூறி தலைமை செயலருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மதுரை, மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில், கடந்த 2017ல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, குட்கா முறைகேட்டில் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த வருமான வரித்துறை முதன்ைம ஆணையரின் கடிதம் உள்ளிட்ட சில ஆவணங்கள் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டன. நுண்ணறிவுப்பிரிவு டிஜிபியாக இருந்த ராஜேந்திரனுக்கு, டிஜிபி பதவி வழங்குவதற்காகவே ரகசிய கடிதத்தை மறைத்துள்ளனர். இதில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தவறான தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, வருமான வரித்துறை சார்பில், டிஜிபி மற்றும் தலைமை செயலரிடம் அளித்த கடிதம் தொடர்பான ஆவணங்கள் சீலிடப்பட்ட கவரில்,  வருமான வரித்துறை முதன்மை ஆணையர் (விசாரணை) தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து மனு மீதான விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் பதிலளிக்க உத்தரவு
போயஸ் கார்டனில் சசிகலா அறையில் குட்கா ஊழல் ெதாடர்பான ரகசிய கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தவும், டிஜிபி ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவும், அவர் பணியில் தொடர தடை விதிக்கவும் கோரி கதிரேசன் மற்றொரு மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.29க்கு தள்ளி வைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IT department ,Chief Secretary ,income tax department ,Madurai Branch , Gudka Case, Chief Secretary, Income Tax Department
× RELATED நேற்று அதிமுக கூட்டணி இறுதி; இன்று...