×

வடலூரில் 148-வது தைப்பூச திருவிழா : ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்

குறிஞ்சிப்பாடி: வடலூரில் 148வது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் 148வது ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் நேற்று காலை 6 மணியளவில் தொடங்கியது. இதில் ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.  

தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ஞானாலயா சுவாமிகள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், பத்மேந்திரா சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற்றது. நேற்று இரவு 7 மணி, 10 மணி மற்றும் இன்று அதிகாலை 5.30 மணி என ஆறு காலங்கள், ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 23ம் தேதி மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் வள்ளலார் பயன்படுத்திய பேழையை வைத்து, பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை திருவறை தரிசனம் நடைபெறவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thaapoosha ,festival ,Vadalur ,darshan ,Jyoti , Thaipusa festival, Vadalur, Jyoti darshanam
× RELATED சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை