×

படகு கவிழ்ந்து 8 பக்தர்கள் பலி

மங்களூரு:  கர்நாடகாவின் நடுகத்ேத பகுதியில் உள்ள ஸ்ரீமஞ்சுநாத் கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு சுமார் 26 பேர் படகு ஒன்றில் வந்து கொண்டிருந்தனர். இவர்களின் படகு நடுகடலில் வந்தபோது பாரம் தாங்க முடியாமல் நீரில் மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். அனைவரும் தங்களை காப்பாற்ற கோரி கூச்சலிட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கூக்குரல் கேட்டது. இதை பாரத்த மற்ற படகில் வந்தவர்கள் உடனே போலீசார் மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து கடலோர காவல்படையினர், மீனவர்களுடன் வந்த போலீசார் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதலில் சுமார் பத்து பேரை அவர்கள் உயிருடன் மீட்டனர். மேலும் 8 பேரை சடலமாக மீட்டனர்.  நடுகத்தே கடற்கரை முழுவதும் அழுகுரல் கேட்டு கொண்டிருந்ததால், பொதுமக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். பாரம் தாங்காமல் இந்த விபத்து நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims , 8 pilgrims die, boat
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்