×

முதுமையில் அமெரிக்கா, ஜப்பான், சீனா இளமை ஆகிறது இந்தியா: சுஷ்மா சுவராஜ் பேச்சு

வாரணாசி: ‘‘அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’’ என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டை வாரணாசியில் பிரதமர் மோடி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். இதற்கு முன்னதாக பதினைந்தாவது வெளிநாட்டுவாழ் இந்திய இளைஞர்கள் தினம் வாரணாசியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று பேசியதாவது:

தற்போது பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய வம்சாவளியினரின் தலைமையில் செயல்படுகிறது. கூகுள் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்ய நாதெல்லா உள்ளார். 2020ம் ஆண்டுக்குள். இந்தியாவில் சராசரி வயது 29 ஆக இருக்கும். இந்திய மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் வேலை பார்க்கக்கூடிய வயதில் இருப்பர். இது இந்தியாவை உலகின் இளம் நாடாக மாற்றும். அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் வேகமாக முதுமை அடைகின்றன. இந்தியா மேலும், மேலும் இளமையாகி கொண்டிருக்கிறது.

2022ம் ஆண்டுக்குள் முதுமை அடையும் நாடுகள், மேலும் முதுமையடையும். அங்கு மூன்றில் ஒரு பங்கினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர். ஆனால் இந்தியாவில் வேலை செய்யும் மக்கள் அதிகளவில் இருப்பர். இந்த மக்கள் தொகை புள்ளி விவரம், இந்தியாவுக்கு இதற்கு முன் இல்லாத ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. இது 2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க உதவும். இவ்வாறு அவர் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Japan ,China ,Sushma Swaraj Talk , USA, Japan, China, India, Sushma Swaraj
× RELATED ஓட்டுப்போட ஜப்பானில் இருந்து பறந்து வந்த சேலம் வாக்காளர்