×

டிரான்ஸ்பரை எதிர்த்து சிபிஐ டிஎஸ்பி மனு

புதுடெல்லி: சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை டிஎஸ்பி ஏ.கே.பாசி விசாரித்து வருகின்றார். இந்நிலையில் பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ், விசாரணை அதிகாரியான ஏ.கே.பாசியை, போர்ட் பிளேருக்கு பணியிட மாற்றம் செய்து கடந்த அக்டோபர் 24ம் தேதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஏ.கே.பாசி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

தனது பணியிடமாற்றமானது, முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவின் மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வழிமுறைகளை மீறும் நடவடிக்கையாகும் என்று ஏ.ேக.பாசி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Transfer, CPI DSP
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை