×

ரயில் தூய்மை குறித்து பயணிகளிடம் சர்வே : தெற்கு ரயில்வேக்கு சொந்தமான ரயில்கள் தேர்வு

சென்னை: இந்திய ரயில்வே சார்பில் ‘ரயில் தூய்மை சர்வே-2018’ எடுக்கப்பட்டது. அதில், ரயில்வே ஸ்டேஷன் சுத்தம், துப்புரவு நிலை, கழிப்பறை வசதி, சீட், ஜன்னல் உள்ளிட்டவற்றின் நிலை குறித்து பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த ஆய்வு மொத்தம் 209 ரயில்களில் நடத்தப்பட்டது. பிறகு அதுகுறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதில், பிரிமியம் பிரிவில் சென்னை சென்ட்ரல் - மைசூரு சதாப்தி ரயில், 1000க்கு 906 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தது.

சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி ரயில் 873 புள்ளிகள் பெற்று 9வது இடம் பிடித்தது. சென்னை - நிஜாமுதீன் ரயில் 764 புள்ளிகள் ெபற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பிரிமியம் பிரிவில் பெங்களூரு - எர்ணாகுளம் மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை ரயில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை முறையே 789, 792 புள்ளிகள் பெற்று பிடித்துள்ளன.ஜன் சதாப்தி ரயில்களில் திருவனந்தபுரம் - கோழிக்கோடு, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ரயில்கள் முறையே 766, 738 புள்ளிகள் பெற்றுள்ளன. மேலும், முக்கிய மெயில் மற்றும் விரைவு ரயில்கள் பிரிவில் 7 ரயில்கள் தெற்கு ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் திருப்பதி - ஜம்மு ரயில் முதலிடம் பிடித்துள்ளது. அந்த ரயில் 885 புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னை எழும்பூர் - மங்களூரு ரயில் 849 புள்ளிகள் பெற்று 4வது இடம்பிடித்துள்ளது. இதற்காக விருது வழங்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Southern Railways , Train cleanup, Survey -2018, Southern Railway
× RELATED திருப்பதிக்கு 15 நாள் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு