×

அமெரிக்கா சென்றதால் ஜெட்லி பங்கேற்கவில்லை அல்வா கிண்டும் நிகழ்ச்சியுடன் பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம்

புதுடெல்லி: அல்வா கிண்டும் பணியுடன் பட்ஜெட் அச்சிடும் பணி நேற்று துவங்கியது. ஆண்டுேதாறும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, பட்ஜெட் பேப்பர்களை அச்சிடும் பணி நடைபெறும். இந்த பணி துவங்குவதற்கு முன்பு அல்வா கிண்டும் பழக்கம் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு மத்திய அரசு வரும் 1ம் தேதி 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறது.  இதை முன்னிட்டு பட்ஜெட் ்அச்சிடும் பணி அல்வா கிண்டும் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. நிதியமைச்சர் அருண்ஜெட்லி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால், மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன்,  ஷிவ் பிரதாப் சுக்லா ஆகியோர் நேற்று அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பட்ஜெட் அச்சிடும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அல்வா விநியோகிக்கப்பட்டது.பொருளாதார விவகார செயலாளர் ஏ.என்.ஜா, வருவாய்த்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பட்ஜெட்டுக்கு முந்தைய இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.   சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் குடியரசு தலைவர் மாளிகையில் அச்சிடப்பட்டது. 1950ம் ஆண்டு பட்ஜெட் தக்கல் செய்வதற்கு முன்பாகவே, பட்ஜெட் தகவல்கள் வெளியாகி விட்டன. இதை தடுக்கும் வகையில், பட்ஜெட் அச்சிடும் பணியில்  பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை வெளியே யாருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது.

தொலைபேசியிலோ, இமெயில் அல்லது வேறு எந்த வகையிலும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு சில மூத்த அதிகாரிகள் மட்டுமே வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.  சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால், மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது. இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், தேர்தலை கருத்தில் கொண்டு சலுகை அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jetley ,US ,Alva Kint , USA, Jetley, Alva, Budget
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...