×

உலகம் முழுவதும் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட்: நிறுவனம் அறிவிப்பு

கலிபோர்னியா: உலகம் முழுவதும் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.உலக அளவில் இந்தியாவில் தான் வாட்ஸ் ஆப்பில் அதிகம் செய்திப்பரிமாற்றம் நடக்கிறது. கடந்த காலங்களில் போலி செய்திகளைப் பகிர்ந்ததன் காரணமாக பல வன்முறைகளும், கூட்டமாக சேர்ந்து சந்தேகத்தின் பேரில் சிலரை அடித்துக் கொன்ற கசப்பான அனுபவங்களும் நடைபெற்றது.

இதையடுத்து, கடந்த 2018 ஜூலை மாதத்தில் உலகளவில் ஒரே நேரத்தில் 20 பேர்களுக்கு மட்டுமே ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பகிர முடியும் என வாட்ஸ் ஆப் அறிவித்தது. அந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக இந்தியாவில் குறைத்தது. இதுகுறித்து விளம்பரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியாவைப் போன்றே பிற நாடுகளிலும் வாட்ஸ் ஆப் செய்தியை பகிரும் வாய்ப்பு ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பயனாளர்களின் கருத்தைப் பொறுத்து அந்த சேவை மேம்படுத்தப்படும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Watchtower: company announcement
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...