×

காங்கயத்தில் ரேக்ளா பந்தயம்: பார்வையாளர்கள் பரவசம்

காங்கயம்: காங்கயத்தில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் வண்டிகளுடன் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதைக்கண்டு பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.  பாரம்பரியமான ரேக்ளா பந்தயங்கள் கொங்கு மண்டலத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. ரேக்ளா பந்தயங்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் காங்கயம் காளைகளின் தாய் வீடான காங்கயத்தில் முதன்முறையாக நேற்று இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. ரேக்ளா போட்டியில் 200 மீட்டர் தூத்திற்கு 260 ரேக்ளா வண்டிகளும், 300 மீட்டர் தூரத்திற்கு 140 வண்டிகளும் என 800 காளைகள் பங்கேற்றன. உடல் வலிமைக்கும் வண்டிபாரம் இழுப்பதற்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், பந்தய தூரத்தை மின்னலென கடந்துசென்றது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

200 மீட்டர் பிரிவில் தாராபுரம் தனசேகர் வண்டி முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சிரவைத்தம்பி, 3வது இடத்தை சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த செந்தில், 4வது இடத்தை இச்சிப்பட்டி லோகு பெற்றனர். 300 மீட்டர் பிரிவில் முதலிடத்தை காங்கயம் பெரியமுத்துசாமிகவுண்டர் வண்டியும், இரண்டாமிடத்தை கிணத்துக்கடவு நிதின் வண்டியும், 3வது இடத்தை கோவை வீரப்பனூர் அன்புகணேஷ் வண்டியும், 4வது இடத்தை முக்கூடல் ஜல்லிபட்டியைச் சேர்ந்த மிதுன் வண்டியும் பிடித்தன. வெற்றி பெற்ற வண்டிகளுக்கு பைக், ஸ்கூட்டர், மொபட், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன. போட்டிகளை காண திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல்  மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கண்டு  ரசித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rakla , Kakayam, ragla bet, audience
× RELATED ஈஷாவில் களைக்கட்டிய ரேக்ளா பந்தயம்;...