ஜன.23-ம் தேதி முதல் நடைபெறவிருந்த கோயில் ஊழியர்களின் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

மதுரை: தமிழகம் முழுவதும் ஜனவரி 23-ம் தேதி முதல் நடைபெறவிருந்த கோயில் ஊழியர்களின் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர் சங்கத்தின் சார்பில் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி சம்பளம் வழங்க வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும். பென்சன் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை கோயில் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் ஜன.23-ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.

போராட்டத்தின் போது அர்ச்சகர்கள் 4 கால பூஜையை தவிர வேறு எந்தவிதமான அர்ச்சனை, அபிஷேகம் செய்யமாட்டார்கள். எனவே திருக்கோயில் பணிகள் முழுமையாக பாதிப்படையும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுவார்கள். தமிழகம் முழுவதும் அவர்கள் மேற்கொள்ளவுள்ள இந்த வேலைநிறுத்தம் சட்ட விரோதமானது. எனவே நீதிமன்றம் தலையிட்டு, இந்த போராட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என தூத்துக்குடி ஆழ்வார் திருநகரியை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். கோயில் பணியாளர்கள் மேற்கொள்ளவுள்ள உள்ளிருப்பு போராட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயில் ஊழியர்களின் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: