குணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்

டெல்லி: பன்றிக் காய்ச்சலால் குணமடைந்த நிலையில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா மேற்கு வங்கத்தில் நாளை பிரசாரத்தை தொடங்குகிறார். பாஜ தலைவர் அமித் ஷாவிற்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவர் குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று  காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது குறித்து அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடவுளின் ஆசியால் நான் தற்போது நலமாக இருக்கிறேன். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு,  வீடு திரும்பியுள்ளேன். நான் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா பகுதியில், பாஜ சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அமித்ஷா நாளை பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து 23, 24ம் தேதிகளில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களிலும் அமித்ஷா பங்கேற்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், பாஜவுக்கு எதிரான கட்சிகள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் நடந்தது. இந்நிலையில், அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: