நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலும் வரும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

நெல்லை: நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வரும் என்று நெல்லையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ெநல்லையில் நேற்று நடந்த எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜவுடன் நாம் நட்புடன் இருந்தாலும் காவிரி பிரச்னையிலும், மேகதாது பிரச்னையிலும் அதிமுக எம்பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் 23  நாட்களாக முடக்கி மக்களுக்காக குரல் கொடுத்தனர். கொடநாடு பிரச்னையில் ஒரு கூலிப்படை செய்ததை என்னோடு ெதாடர்புபடுத்தி எனக்கு எதிராக சதி செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். பாளையங்கோட்டையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலத்திட்டங்கள் சரியாக  வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்த ஆட்சி 10 நாளில் கவிழ்ந்து விடும். 6 மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று சிலர் ஆருடம் கூறுகின்றனர். ஆனால் அவர்களின்  எண்ணம் நிறைவேறாது என்றார்.

முன்னதாக  கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பைபாஸ் ரோட்டில் அமைச்சர் கடம்பூர்ராஜூ தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் முதல்வர் பேசுைகயில் விரைவில்  நாடாளுமன்ற தேர்தலுடன், இடைத்தேர்தலும் வர இருக்கிறது. ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதியில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சிலரது பேச்சை கேட்டு கட்சிக்கு துரோகம்  செய்துவிட்டு சென்றனர். இன்றைக்கு அவர்கள் வீதியில் நிற்கின்றனர் என்றார்.விருதுநகர் மாவட்டம் வழியாக சென்ற, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, சாத்தூரில் உள்ள மதுரை பஸ் நிறுத்தம் அருகே, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் வரவேற்பு  அளிக்கப்பட்டது. அங்கு  எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுகவை அழிக்க நினைத்த தினகரனை நம்பி, இந்த தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன் சென்றார். அவர் தற்போது பதவி  இழந்து நிர்க்கதியாக இருக்கிறார். இந்த மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருக்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க இந்த அரசு பாடுபடும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க, வருகிற 23, 24ம் தேதி சென்னையில் உலக  முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளோம். மூன்று லட்சம் கோடி அன்னிய முதலீட்டை ஈர்த்து, தமிழகத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: