அந்நிய செலாவணி கையிருப்பு 126 கோடி டாலர் உயர்வு

புதுடெல்லி: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 126.7 கோடி டாலர் அதிகரித்து, 39,735.1 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வாரம்  கையிருப்பு 268 கோடி டாலர் அதிகரித்து 39,608.4 கோடி டாலராக இருந்தது. கையிருப்பு உயர்ந்ததற்கு வெளிநாட்டு கரன்சி மதிப்பு அதிகரித்ததே காரணம். மேற்கண்ட வாரத்தில் வெளிநாட்டு கரன்சி  மதிப்பு 108.7 கோடி டாலர் உயர்ந்து 37,137.9 கோடி டாலராக இருந்தது.  வெளிநாட்டு கரன்சி மதிப்பு டாலரில் கணக்கிடப்படுகிறது. இதில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கையிருப்பிலும் எதிரொலிக்கிறது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி கையிருப்பு 42,602.8 கோடி டாலர் என்ற உச்சபட்ச அளவை எட்டியிருந்தது.

இதன்பிறகு ஏற்ற இறக்கங்கள் நீடித்து வருகின்றன. தங்கம் கையிருப்பு 15.44 கோடி டாலர் உயர்ந்து 2,184.4 கோடி டாலரரக இருந்தது. சர்வதேச நிதியத்தில் கையிருப்பு 1.63 கோடி டாலர் உயர்ந்து 265.6 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: