×

டிடிஎஸ், ரிட்டர்ன் மறந்தால் ஆபத்து சின்ன தப்பு இருந்தாலும் பறக்குது ஐடி நோட்டீஸ்

* மாதச்சம்பளம் வாங்குவோர் கூட தப்பவில்லை
* சிறைத்தண்டனைக்கு பயந்து பலர் பரிதவிப்பு
புதுடெல்லி: வரி ஏய்ப்பு மிகச்சிறிய அளவாக இருந்தாலும் வருமான வரித்துறை விடுவதில்லை. இப்படி பல ஆயிரம் பேருக்கு வருமான வரி நோட்டீஸ் பறந்துள்ளது. 7 ஆண்டு வரை சிறை  தண்டனை கிடைக்கும் என்பதால், பலர் செய்வதறியாது திகைத்துள்ளனர். சிலர் தீர்வு காண நீதிமன்றங்களை நாடியுள்ளனர். வரி வருவாயை அதிகரிக்க மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயித்துள்ளது மத்திய நேரடி வரிகள் ஆணையம். நேரடி வரி வருவாய் குறைந்ததை தொடர்ந்து, இலக்கை எட்டுவதற்கான  நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வரிகள் ஆணையம் அதிகரிகளுக்கு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து, வரி ஏய்ப்புகளை கண்டுபிடிப்பதில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஆனால், சிறு தவறு இருந்தாலும் விட்டு வைப்பதில்லை. உடனேயே நோட்டீஸ் அனுப்பி  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஊழியர்களிடம் வசூலித்த டிடிஎஸ் தொகையை கட்டாததற்கு நோட்டீஸ் பறந்துள்ளது. வருமான வரி சட்டம் பிரிவு 276பி-ன்படி (டிடிஎஸ் தொகையை அரசிடம் செலுத்த தவறியதற்காக) ஏன்  நடவடிக்கை எடுக்கக்கூடாது என நோட்டீசில் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் பதறிப்போன அந்த நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.  இத்தனைக்கும் அந்த நிறுவனத்தில் 4 பேருக்Gதான் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்துக்கு மேல் உள்ளது. இந்த நிதியாண்டு இறுதிக்குள் கட்டுவதற்குள் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இதுதவிர, தலைவர், நிர்வாக இயக்குநர் விவரங்களை சமர்ப்பிக்கவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வருமான வரி விதிகளின்படி டிடிஎஸ் பணத்தை கட்ட தவறினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கம். வரி ஏய்ப்பு ₹25,000க்கு கீழ் இருந்தால் 2 ஆண்டு சிறைத்தண்டனை, ₹25,000க்கு மேல்  இருந்தால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை உண்டு. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கலாம்.  கடந்த சில மாதங்களாக, இப்படி தண்டனை விதிகளை குறிப்பிட்டு பல ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி கலக்கம் அடைய வைத்துள்ளது. நிறுவனங்கள் மட்டுமல்ல,  மாதச்சம்பளம் வாங்குவோரும் இதில் தப்பவில்லை. தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்த அல்லது தாக்கல் செய்ய மறந்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்கள்  அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆடிட்டர்கள் சிலர் கூறுகையில், மிகச்சிறிய விஷயங்களுக்கெல்லாம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. டிடிஎஸ் தாமதமாக செலுத்துவது, வருமான வரி  கணக்கு தாக்கல் செய்யாதது அல்லது தாமதமாக தாக்கல் செய்வது என எதையுமே விட்டு வைப்பதில்லை. இதற்கு விளக்கம் அளிக்க மிகக்குறுகிய அவகாசமே இருப்பதால் வரி செலுத்துவோர்  பீதியும், பதற்றமும் அடைகின்றனர் என்றனர். வருமான வரி சட்ட விதிகள் இயந்திரத்தனமாக பயன்படுத்தப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், வருமான வரி அதிகாரிகள் கூறுகையில், சரியான ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஏற்கத்தக்க காரணம்  என்று எந்த வரையறையும் இல்லை எனினும், உடல் நலக்கோளாறு, நிதி தட்டுப்பாடு ேபான்ற காரணங்கள் கூட உரிய ஆதாரத்தோடு சமர்ப்பிக்கப்பட்டால் சூழ்நிலை கருதி ஏற்கப்படுகிறது.  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மாஜிதிரேட் முன்பு ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றனர்.

* கணக்கு தாக்கல் செய்ய மறந்தால் 7 ஆண்டு வரை சிறை.
* வரி ஏய்ப்பு ₹25,000க்கு கீழ் இருந்தால் கூட 2 ஆண்டு கம்பி எண்ண வேண்டும்.
* ‘திருப்தியான’ பதில் தந்தால் தப்பலாம்; இல்லாவிட்டால் கோர்ட்டை நாடலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DTS , DTS,lyer ,ID notice,risk is lost,
× RELATED நிறுவன ஊழியர்கள் பான், ஆதார்...