நிலக்கரி இறக்குமதி 6.7 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் - டிசம்பர் வரை 171.81 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்துடன்  ஒப்பிடுகையில் 6.7 சதவீதம் அதிகம். ஆனால், கடந்த டிசம்பரில் நிலக்கரி இறக்குமதி 8.09 சதவீதம் சரிந்து 17.25 மில்லியன் டன்களாக இருந்தது.  நிலக்கரி இறக்குமதியை குறைக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 2019-20 நிதியாண்டுக்குள் கோல் இந்தியா 100 கோடி டன் நிலக்கரி  உற்பத்தி இலக்கை எட்ட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் நிதியாண்டில் 652 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோல் இந்தியா அறிவித்துள்ளது.  நடப்பு நிதியாண்டில் நிலக்கரி இறக்குமதி  அதிகரித்ததற்கு, உள்நாட்டு மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு சப்ளை அதிகமானதே காரணம் நிலக்கரி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: