பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ரூ.1.2 லட்சம் கோடி புரளும் கும்பமேளா

பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளா மூலம் ₹1.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற இடத்தில், உலக புகழ்பெற்ற கும்பமேளா கடந்த  15ம் தேதி தொடங்கியது. மார்ச் 4ம் தேதி வரை மொத்தம் 50 நாட்கள் இந்த  விழா நடக்கிறது. இந்த விழா ஏற்பாடுகளுக்காக  உத்தரப் பிரதேச அரசு ₹4,200 கோடி ஒதுக்கியுள்ளது.  இந்த விழா ஆன்மீக விழா என்றாலும், இதனுடன் ஏராளமான வர்த்தகமும் நடக்கிறது. பல துறைகளில் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் இந்த விழா மூலம் வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைக்கிறது. ஓட்டல்கள், உணவு விற்பனை தொழிலில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும்,  சுற்றுலா ஆபரேட்டர்கள் 45 ஆயிரம் பேருக்கும், விமான நிலையங்கள், விமான நிறுவனங்களில் ஒரு  லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும், சுற்றுச்சூழல் சுற்றுலா, மருத்துவ சுற்றுலா மூலம் 85 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என சிஐஐ கூறியுள்ளது.

சுற்றுலா வழிகாட்டிகள், டாக்சி டிரைவர்கள், விளக்கம் அளிப்பவர்கள், தன்னார்வ தொண்டர்கள் என முறைசாரா தொழிலும் 55 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். கும்பமேளாவை பார்க்க   வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்த விழாவால் மொத்தமாக ₹1.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என சிஐஐ தெரிவித்துள்ளது.இன்று 2வது புனித நீராடல்கும்பமேளா விழாவில் புனித நீராடல் நிகழ்ச்சிகள் தினமும் நடந்தாலும் முக்கிய நீராடல் நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் அலாகாபாத் வந்து, கங்கை, யமுனை, சரஸ்வதி கலக்கும்  சங்கமத்தில் புனித நீராடுகிறார்கள். கும்பமேளா தொடங்கிய மகர சங்ராந்தி அன்று ஒரு கோடிக்கும் அதிகமானோர் நீராடினர். பவுர்ணமியை முன்னிட்டு இன்று 20 லட்சம் பேர் சங்கமத்தில் நீராட உள்ளனர். இதற்காக பிரயாக்ராஜ்  ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: