கேரள அரசு லாட்டரியில் தேனி பெண்ணுக்கு ரூ.80 லட்சம் பரிசு

திருவனந்தபுரம்: கேரள அரசு லாட்டரியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண் கடலை வியாபாரிக்கு ₹80 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.தேனியை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி அழகம்மாள். கடந்த 40 வருடங்களுக்கு முன் இவர்கள் கேரள மாநிலம் சேர்த்தலா அருகே அர்த்துங்கல் பகுதியில் குடியேறினர். இவர்கள்  கோயில் விழாக்களில் கடலை வியாபாரம் செய்து வந்தனர்.இந்நிலையில், சின்னையன் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து இவரது மகள் தனலட்சுமி (30) கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள அரசின்  காருண்யா பிளஸ் லாட்டரியை வாங்கினார்.அதில் முதல் பரிசான ₹80 லட்சம் அவருக்கு கிடைத்துள்ளது. ஏழ்மையில் இருந்த இவர்களுக்கு 80 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்ததால்  தனலட்சுமியின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: