ஆம்பூர் அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: மேலும் 3 பேர் படுகாயம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா மேல் ஆலத்தூர் அருகே இஸ்லாமியர்களுக்கான இஸ்திமா  மாநாடு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  பேரணாம்பட்டை சேர்ந்த 7 பேர் தங்களது காரில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவில் அங்கிருந்து 7 பேரும் காரில் பேரணாம்பட்டுக்கு புறப்பட்டனர்.நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் அருகே அயித்தம்பட்டு எம்ஆர் நகர் பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக  ஓடி  சாலையோர புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. இடிபாட்டில் அனைவரும் சிக்கிக்கொண்டு கூச்சலிட்டனர். அதிகாலை ேநரத்தில் விபத்து நடத சத்தம் கேட்ட அப்பகுதியினர்  ஓடிவந்தனர். அவர்கள் காரில் சில வாலிபர்கள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளை அகற்றி உள்ளே இருந்தவர்களை  மீட்டனர். அப்போது, காரிலேயே பேரணாம்பட்டை சேர்ந்த முகமத் சபான் (22), இம்ரான் (22), உசேன் (22) ஆகியோர் உடல் நசுங்கி இறந்து கிடந்தனர். அவர்களது சடலங்களை பிரேத  பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த  முஜமில்(22),நுபேல் (21), சல்மான் (22), சல்மான் (23) ஆகிய 4 பேரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதில் பலத்த  காயமடைந்த முஜமில் மற்றும் நுபேல் ஆகிய இருவரும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முஜமில் இறந்தார். தகவலறிந்ததும் விபத்தில்  சிக்கியவர்களின்  குடும்பத்தினர், உறவினர்கள் உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடத்திய  விசாரணையில், விபத்தில் பலியான அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்று தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: