பணம் வேண்டாம், இலவச அரிசியே தொடர்ந்து வழங்க வேண்டும்: புதுவை கவர்னர் கிரண்பேடியிடம் பெண்கள் திரண்டு முறையீடு

பாகூர்: பாகூர் அருகே ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பேடியிடம் அப்பகுதி பெண்கள் திரண்டு பணம் வேண்டாம், இலவச அரிசியே தொடர வேண்டும் என முறையிட்டனர்.புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே குருவிநத்தம் ஆர்ஆர் நகரில் கவர்னர் கிரண்பேடி நேற்று காலை  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள்  உள்ளிட்டோரை அழைத்து குறைகளை சுட்டிக்காட்டி அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவிட்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கவர்னரை சந்தித்து முறையிட வந்தனர்.  அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். இதைக்கண்ட கவர்னர் அந்த பெண்களை அழைத்து பேசினார்.அப்போது அவர்கள், இதற்கு முன்பு ரேஷன் கடையில் இலவச அரிசி போட்டனர். ஆனால் தற்போது அரிசிக்கு பதில் வங்கி கணக்கில் பணம் போடுகிறார்கள்.

அந்த தொகை மாதம் முழுவதற்கும்  தேவையான அரிசி வாங்க போதுமானதாக இல்லை. எனவே பழையபடி அரிசியாக கொடுக்க வேண்டும். பணம் வேண்டாம், என தெரிவித்தனர். உடனே கவர்னர், இலவச அரிசியை ஏழைகளுக்கு  கொடுக்க வேண்டுமா? பணக்காரர்களுக்கு கொடுக்க வேண்டுமா? என திருப்பி திருப்பி கேட்டார். இதற்கு பதிலளித்த பெண்கள், மஞ்சள் அட்டை வைத்திருப்பவர்களிலும் ஏழை எளியோர் உள்ளனர்.  அவர்களுக்கும் இலவச அரிசி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்றனர்.பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கவர்னர், மகளிர் சுய உதவிக்குழு பெண்களுடன் கலைந்துரையாடினார். அப்பகுதியில் மதுக்கடைகள் அதிகமாக உள்ளதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை  ஏற்படுகிறது. அவற்ைற அப்புறப்படுத்த வேண்டும் என ெபண்கள் முறையிட்டனர். இதற்கு கவர்னர், மனு தந்தால், நான் நடவடிக்கை எடுக்கிறேன், என்று கூறிசென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: