அதிகரித்து விட்டது வேலையில்லா திண்டாட்டம்: ராமசாமி, சட்டசபை காங்கிரஸ் தலைவர்

பண மதிப்பிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மக்கள், இன்னும் அதில் இருந்து மீளாமல் உள்ளனர். பிரதமர் மோடி தான் சொன்னதை இதுவரை செய்யவே இல்ைல. இளைஞர்களுக்கு நிறைய  வேலைவாய்ப்பை ஏற்படுத்த போவதாக கூறினார். நாட்டின் வேலைவாய்ப்பு இல்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது. படித்த இளைஞர்கள் தங்களது தகுதிக்கு ஏற்றாற்போல் வேலை  கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.  கருப்பு பணத்தை எல்லாம் வெளியில் கொண்டு வந்து விடுவோம். கருப்பு பணத்தில் வரும் பணத்தை மக்கள் வங்கி கணக்கில் பிரித்து வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், பாஜ 5 ஆண்டுகால  ஆட்சி  முடிய உள்ள நிலையில் தற்போது வரை மக்கள் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட போடவில்லை. உண்மையிலேயே இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மோடி தனித்தே செயல்பட்டார். அவரது ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக உண்மையில் அனைத்து தரப்பினரும்  பாதிக்கப்பட்டனர்.      உதாரணத்திற்கு சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை நியமிக்க நீதிமன்றமே உத்தரவிட்ட நிலையில், இதுவரை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதையெல்லாம் மக்கள் கூர்ந்து கவனித்து  வருகின்றனர். இது போன்ற பிரச்சனையால் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க போகிறார்கள். அதுவரை மக்களை அவர்கள் தாக்கு பிடிப்பதே பெரிய விஷயம் தான். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் அங்குள்ள மக்கள் உறுதியாக உள்ளனர். ஆனால், தமிழக அரசு, மத்திய அரசுடன் உள்ள தொடர்பு காரணமாக, அதில் உறுதிபாடான ஒரு நிலையை  எடுக்க முடியவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயத்தில் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், தமிழக அரசு மக்கள் கூறிய படி சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற  தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதையெல்லாம் மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

டெல்டா மண்டலங்களில் ைஹட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கப்போவதாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்த விளை நிலத்தை நம்பி தான் அப்பகுதி மக்கள் உள்ளனர். அந்த பகுதிகளில்  ஹைட்ரோ கார்பன், மீத்ேதன் எடுக்க ஆரம்பித்து விட்டால் அதன் பின்விளைவுகள் என்னவாகும் என்பதை பார்ப்பதில்லை.  ஒரு பகுதியை இழந்தால் என்ன? அதனால், வரும் லாபம் தான் முக்கியம்  என்று மத்திய அரசு கூறி வருகிறது. தமிழக அரசின் பின்னணியில் தான் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். மக்களை பாதிக்கும் இதுபோன்ற விஷயங்களில் இவர்களின் போக்கு சரியல்ல;  எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூட தெரியவில்லை.  இதன் விளைவாக டெல்டா பகுதிகளில் மோசமான விளைவை சந்திக்க இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருவாயை கொடுப்போம் என்று கூறினார்கள்.  விவசாயிகளுக்கு எந்த வகையில் உதவியுள்ளனர். காவிரி பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதெல்லாம் மக்கள் எப்படி மறப்பார்கள். இதற்கெல்லாம் தேர்தலில் நல்ல  முடிவு கிடைக்கும். அது உண்மை. நாங்கள் நம்புகிறோம். மக்கள் எதிர்க்கும் திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றாது என்று கூறி வருகின்றனர். அப்படியென்றால் சேலம் எட்டு வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும்  நிலையில், அதை கொண்டு வர முயற்சிப்பது ஏன். அதிமுக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று. அதனால், லாபம் அடைவது மக்களே கிடையாது. அந்த அரசை நடத்துபவர்கள் தான் லாபம் அடைந்து  வருகின்றனர். இது எல்லோருக்கும் தெரியும்.ஹைட்ரோ கார்பன், மீத்ேதன் எடுக்க ஆரம்பித்து விட்டால் அதன் பின்விளைவுகள் என்னவாகும் என்று பார்ப்பதில்லை. ஒரு பகுதியை இழந்தால் என்ன? அதனால், வரும் லாபம் தான் முக்கியம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: