×

வேலைவாய்ப்பு, வளர்ச்சி மட்டுமே தீர்மானிக்கும்: சிபி.ராதாகிருஷ்ணன், பா.ஜ. மூத்த தலைவர்

வரும் பாராளுமன்ற தேர்தலின் முடிவை, முதலாவது விலைவாசி, இரண்டாவது வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மூன்றாவது மக்கள் மனதில் தேர்தல் மாதத்தில் இருக்கும் உணர்வுகள் தான்  தீர்மானிக்கிறது. பாஜகவை பொறுத்தவரையில் விலைவாசி உயர்வே இல்லாத 5 ஆண்டு கால ஆட்சியாக உள்ளது. தொழிலாளர்களின் கூலியை இரட்டிப்பாக்கியது. எல்லோருக்கும் தரமான  மின்வெட்டு இல்லாத இந்தியாவை உருவாக்கியது.  ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சொந்தமான இடத்தில், அவர்களுக்கு விருப்பத்தின் பேரில் வீடு கட்ட அனுமதிப்பது, அதற்கு மானியமாக ₹2 லட்சம் அளிப்பது, எல்லா  குடும்பத்திற்கும் மருத்துவ காப்பீடாக ₹5 லட்சம் அளிப்பது, மாதம் தோறும் ₹500 சேமிப்பில் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மாதத்திற்கு ஒரு ரூபாயில் விபத்து காப்பீடு.  இவையெல்லாம் ஒரு சாதாரண மக்களின் வாழ்வில் ஏற்றத்தை தருவது ஆகும். அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் 6 கோடி தாய்மார்களுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு தந்தது.  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு விளை பொருட்களுக்கு அரசு ஆதார விலையில் உயர்த்தி கொடுத்தது, விவசாயிகளுக்கு இயற்கை சீற்றம் காரணமாக ஏற்படும்  இழப்புக்கு அதாவது தனிப்பட்ட நபர் பாதிக்கப்பட்டால் அவருக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.  அதே நேரத்தில் ெதாழில் வளர்ச்சி வேகம் சீனாவை விஞ்சி நிற்கிறது. உலகில் ஐந்து பெரிய பொருளாதார நாட்டில் ஒன்றாக இந்தியா உயர்ந்து நிற்கிறது. அதிவேகமான தொழில் நுட்பங்கள் இந்தியா  உலக நாடுகள் உடன் போட்டி போடுகிறது. ரயில்வே துறையில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள். புல்லட் ரயில் உட்பட அத்துனை ரயில்களும் நம் தேசத்திற்கும் வரும் சூழ்நிலையை பாஜ அரசு  உருவாக்கி இருக்கிறது.
.
மெட்ரோ ரயில்களுக்கென்று எல்லா மாநிலங்களுக்கும் தாராளமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி நகரங்கள் எல்லாம் அடிப்படை கட்டுமானத்தில் மிக உயர்ந்த நிலையை  பெறுவதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அதிக நகரங்களுக்கு ஒதுக்கி தரப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சட்டம் ஒழுங்கு  என்பது இன்றைக்கு பரவலாக நாடு முழுவதும் ஒரு கட்டுக்கோப்பிற்குள் உள்ளது.  இந்தியாவில் கருப்பு பண நடமாட்டம் என்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று யாராலும் மறுக்க முடியாது. முதன்முறையாக துணிந்து கருப்பு பண முதலைகளுக்கு எதிராக ஒரு பிரதமர்  நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று சொன்னால் மோடி அவர்கள் தான். அவருடைய துணிச்சலுக்கு நிகர் அவரே தான்.
 பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ேமாடி தான் காரணம் என்று சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே பெட்ரோல் டீசல் விலை காங்கிரஸ் ஆட்சியை விட குறைந்த போது இதற்கும் மோடி தான்  காரணம் என்று யாரும் சொல்லவில்லை. உயர்ந்தால் மோடியை குறை கூறுபவர்கள் குறைந்தால் பாராட்டுவதில்லை. இதில், இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் மோடி காரணம் இல்லை.  குறைவதற்கும் மோடி காரணம் இல்லை. இது சர்வதேச சந்தையின் விலை ஏற்றத்தை வைத்து தான் அமைகிறது. ஆனால், மோடி எடுக்கும் முயற்சி இந்திய தேசத்தை மட்டுமில்லாமல், உலக  நாடுகளின் நன்மையை காக்கும் வகையில் உள்ளது. அதாவது, டாலரில் தான் பெட்ரோல் டீசல் வாங்க வேண்டும் என்ற நிலையை மாற்றும் முயற்சி உலகம் முழுவதும் மத்தியில்  பாராட்டப்படுகிறது. எதிர்காலத்தில் நடுத்தர மக்களின் பெட்ரோல், டீசல் செலவே இல்லை என்ற நிலை ஏற்படும்.பாஜகவை பொறுத்தவரையில் விலைவாசி உயர்வே இல்லாத 5 ஆண்டு கால ஆட்சியாக உள்ளது. தொழிலாளர்களின் கூலியை இரட்டிப்பாக்கியது. எல்லோருக்கும் தரமான மின்வெட்டு இல்லாத இந்தியாவை உருவாக்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Senior leader ,BJP , Employment,Development , Decide, CPI Radhakrishnan, BJP Senior leader
× RELATED முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த...