×

மக்களின் எண்ணம் எங்களுக்கு புரியும்: ஜெயக்குமார், மீன்வளத்துறை அமைச்சர்

நீ ந்தத் தெரிந்தவனுக்கு கடலின் ஆழம் பற்றி கவலை இல்லை. அதுமாதிரி மக்களோடு இருப்பவர்கள் என்ற அடிப்படையில் மக்களோடு விருப்பம், எண்ணம், அவர்களின் உணர்வு  அத்தனையும் முழுமையாக தெரிந்து உதவி செய்கிற இயக்கம் அதிமுக. எனவே தான், எம்ஜிஆர் அண்ணா கொள்கையை தாங்கி சிறப்பான ஆட்சியை நடத்தினார் ஜெயலலிதா.   அடிப்படை கல்வியை தந்தால், அந்த சமுதாயமே முழுமையான அளவுக்கு ஏற்றம் பெறும். கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கு வதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு ₹25 ஆயிரம்  கோடிக்கு மேல் ஜெயலலிதா காலத்தில் ஒதுக்கீடு செய்து 16 வகையான பொருட்களை தந்தார். அதில், குறிப்பிட்டு சொல்லும் படியாக ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு  விலையில்லா மடிக்கணினியை வழங்கினார். ஒரு கிராமங்களில் இருந்து உயர்நிலை, நடுநிலை பள்ளி பல கி.மீ நடந்து வரும் நிலை தான் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த  மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. தமிழகம் போன்று மற்ற மாநிலங்களுக்கு இந்த திட்டத்தை கொண்டு வர முயற்சித்தனர். உதாரணமாக, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட  மாணவர்களுக்க சைக்கிள் வழங்கும் திட்டம் பெரும் வெற்றி கண்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் கொண்டு வர முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. கர்நாடகாவில் சைக்கிள் திட்டம்  கொண்டு வந்தும் அமல்படுத்த முடியவில்லை.  

மாநிலத்தில் தொழில் வளம், உற்பத்தி திறன். அதாவது விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும் என்று எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பயனாக, நாம் இந்த  அத்தனை வளங்களையும் வெகுவாக அடைந்து இருக்கிறோம். கடந்த 2015ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் பயனாக 1 லட்சம் கோடி முதலீட்டில் பல தொழில் நிறுவனங்கள் வந்து தொழில்  தொடங்கியுள்ளது. தற்போது முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான கோடி முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தம்  கையெழுத்திடப்படவுள்ளது. தொழில்வளம் , விவசாயம் உட்பட எல்லாம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். உணவு உற்பத்தியில் சாதனை படைத்ததாக மத்திய அரசு  விருதுகளை வாங்கியுள்ளோம். அதே போன்று பல விருதுகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. ஒரு மாநிலம் என்பது அடிப்படை கட்டமைப்பு வசதி இருக்க வேண்டும். அதாவது சாலை, பாலங்கள், தெரு விளக்குகள், குடிநீர், கழிவு நீர் வசதி மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை முழுமையாக  நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு. இதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். எனவே தான், அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை நாங்கள் முன்னிலைப்படுத்தி தான் தேர்தல் பிரசாரம்  செய்வோம்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் தான் மத்திய அரசு கொண்டு வந்த சில திட்டங்களை எதிர்த்தோம். அதாவது ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினோ  திட்டம் எதுவாக இருந்தாலும் எதிர்த்தோம். மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த திட்டத்திற்கும் அதிமுக அரசின் ஆதரவு உண்டு. மக்கள் ஏற்றுக்கொள்ளாத திட்டத்திற்கு அதிமுக அரசு ஆதரவு  கிடையாது. மக்களின் உணர்வு தான் எங்களுக்கு முக்கியம். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் இல்லை.சைக்கிள் வழங்கும் திட்டம், உத்தரபிரதேச மாநிலத்தில் கொண்டு வர முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. கர்நாடகாவில் சைக்கிள் திட்டம் கொண்டு வந்தும் அமல்படுத்த  முடியவில்லை

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayakumar , People's intention,nderstand,Jayakumar, Minister of Fisheries
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...