மக்களை வெகுவாக பாதித்து விட்டது விலைவாசி: துரைமுருகன், திமுக பொருளாளர்

வரலாறு காணாத விலைவாசி எல்லா பொருட்களும் விலை ஏறியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அதிகரித்து இருப்பதே அடிப்படை காரணம். இரண்டாவதாக காஸ் சிலிண்டர் விலை  அளவில்லாத ஏற்றம் பெற்று விட்டது. ஜிஎஸ்டி வரி என்ற பயங்கரமான வரியும் எல்லா பொருட்களையும் விலை ஏற்றியுள்ளது. இவை மக்களை வெகுவாக பாதித்து விட்டது.  தமிழ்நாட்டில்  மத்திய அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் என்று சொல்லி கொள்ளும் படி எதுவும் இல்லை. இது தான் தேர்தலை தீர்மானிக்கக்கூடிய முக்கிய விஷயங்கள்.  பிரதமர் மோடி, தமிழகத்தில் 2016ல் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று கூறினார். ஆனால், இப்போது தான் அடிக்கல் நாட்டுகிறார். 5 ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படி மத்திய அரசு  திட்டம் ஒன்று கூட வரவில்லை. தமிழக மக்கள் அதிகமாக பேசக்கூடியது கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு நடந்து வருகிறது. அடுத்து மீனவர்களின் பிரச்னைக்கு தற்போது வரை தீர்வு  காணப்படவில்லை.   அடித்தட்டு மக்களுக்கு எடப்பாடி அரசு எதுவும் செய்யவில்லை. மைனாரிட்டியான அந்த அரசை மத்திய அரசு காப்பாற்றி வருகிறது என்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.  வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு வருவேன் என்று மோடி கூறினார். அவ்வாறு கொண்டு வரப்படும் பணம் ₹10 லட்சம் கோடி இருக்கும். அந்த பணம் ஒவ்வொரு மக்கள் வங்கி கணக்கில் வரவு  வைக்கப்படும் என்று மோடி கூறினார். ஆனால், தற்போது வரை அப்படி எதுவும் செய்யவில்லை.

 கூட்டு அமைச்சரவை குழு என்பது கிடையாது. மோடி தனிமனிதராகத்தான் செயல்பட்டு வருகிறார். ஒரு மாதத்திற்கு விடாமல் வெளிநாட்டிற்கு செல்கிறார். இதுவரை 87 நாடுகளுக்கு சென்று  இருக்கிறார். இதுவரை அவர் வெளியுறவுத்துறை அமைச்சரை அழைத்து போனதில்லை. ஏனென்றால் அமைச்சர்களை அழைத்துப் போவதையே தவிர்க்கிறார். கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டனர். தமிழக விவசாயிகள் கூட டெல்லி சென்று போராட்டம் நடத்தினர். ஆனால், பிரதமர் மோடி அவர்களை அழைத்து பேசக்கூடவில்லை. கஜா புயலால் தமிழகத்தில் 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வளமான தஞ்சை மண்டலம் பாலைவனமாக காட்சியளிக்கிறது. ஒரு நாள் கூட பிரதமர் பார்க்கவில்லை. ஒரு  அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. கேரளாவில் வெள்ளம் வந்த போது போய் பார்த்தார். வட நாட்டில் இயற்கை பேரழிவு வந்தால் போய் பார்த்தார். லட்சக்கணக்கான விவசாயிகள்  பாதிக்கப்பட்டும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. இதனால், பிரதமர் மோடி மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளார். நமது நாட்டில் இந்துத்துவா கொண்டு வர வேண்டும் என்று  பார்க்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இந்து முஸ்லீம்கள் மாமன், மச்சான்களாக வாழ்ந்து வருகின்றனர். அதையெல்லாம் கெடுப்பது ேபான்று அவருடைய செயல்பாடுகள் உள்ளது.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய அரசு கொண்டு வருவதாக அவர்கள் மீது வெறுப்பில் மக்கள் உள்ளனர். இவையெல்லாம் தேர்தல் நேரத்தில் விஸ்வரூபமாக வந்து நிற்கும். ஆக  படித்தவர்கள், பாமரர்கள் மத்தியில் வெறுப்பை தான் மோடி அரசு சம்பாதித்து வைத்துள்ளது.பிரதமர் மோடி, தமிழகத்தில் 2016ல் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று கூறினார். ஆனால், இப்போது தான் அடிக்கல் நாட்டுகிறார். 5 ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படி மத்திய அரசு திட்டம் ஒன்று கூட வரவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: