குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், சுதந்திர தினம், குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 26ம் தேதி குடியரசு தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட  உள்ளது. இந்நிலையில் குடியரசுத் தினத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  அதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளருக்கும் குடியரசு தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி  தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவுப்படி போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் 32 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்,  சுற்றுலாத்தலங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு முன்ெனச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அதைப் போன்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 12 காவல் மாவட்டத்தில் உள்ள துணை கண்காணிப்பாளர்களுக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்  படியும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்புகள் கூடிய துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,  சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: