43வது கடலோர காவல் படை தினம் நடுக்கடலில் வீரர்கள் சாகச நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்

சென்னை: 43 வது கடலோர காவல் தினத்தை முன்னிட்டு வீரர்கள் நடுக்கடலில் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். இதை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டுகளித்தனர்.  உலகின் நான்காவது பெரிய கடலோர காவல் படை என்ற பெருமையை பெற்றுள்ள இந்திய கடலோர காவல் படையானது 1977 ம் ஆண்டு பிப்ரவரி 1 ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தினமானது  கடலோர காவல் தினமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் 43வது கடலோர காவல் படை தினம் வரும் பிப்ரவரி 1 ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு  கடலோர காவல் படையில் பணிகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் “கடலில் ஒரு நாள்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதன்படி கடந்த 18,19 மற்றும் 20ம் தேதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடலோர காவல் படை கப்பலில் கடலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

குறிப்பாக நேற்றைய தினம் மீனவர் குடும்பங்களைச் ேசர்ந்தவர்கள் கடலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொது மக்களிடம் கடலோர காவல் படை கிழக்கு  பிராந்திய படைத் தளபதி எஸ்.பரமேஷ் உரையாற்றினார். அப்போது கடலோர காவல் படை வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். இதனை ஆயிரக்கணக்கான பொது மக்கள்  ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இந்த சாகச நிகழ்ச்சியில்  கடலோர காவல் படையைச் சேர்ந்த சாகர், சமுத்ரா, வரத்,சவுரியா, ராஜ் தராங், சங்கவான்,சாரங், அனாக், ஆகிய 8 கப்பல்கள் மற்றும் 2 சிறிய  ரோந்து கப்பல்கள், 2 டார்னியர் ரக விமானங்கள், 2 ஹொலிகாப்டர்கள் பங்ககேற்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: