ஏரிகள், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு தகவலை மறைக்க இணையதளத்தில் இருந்து நிலத்தடி நீர்மட்ட விவரங்கள் திடீர் நீக்கம்: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னை: பொதுப்பணித் துறையின் அங்கமான நீர்வளப் பிரிவின் கட்டுப்பாட்டில் மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மைய அலுவலகம் தரமணியில் செயல்பட்டு  வருகிறது. இந்த அலுவலகம் சார்பில் மாநிலத்தின் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள்  மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம், தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வளஆதாரத்துறை மூலம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் நிலத்தடி நீர் மட்ட விவரங்களை அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் www.stategroundwater.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதன்படி  கடந்த மாதத்திற்கான நிலத்தடி நீர் மட்டம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை ெபாய்த்ததால், 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம்  வெகுவாக குறைந்து இருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே, பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டுள்ளன. எனவே, கோடை காலத்தில் தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் நிலை  ஏற்பட வாய்ப்புள்ளது என்று கடந்த ஜனவரி 13ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததற்காக காரணங்களையும்,  நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித் துறையிடம் அறிக்கை கேட்டது. இந்நிலையில், இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலத்தடி நீர்  மட்ட விவரங்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இருப்பதால், கடந்த சில ஆண்டுகளில் அதிகரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது  என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர வாய்ப்புள்ளது. எனவே, நிலத்தடி நீர் பற்றிய புள்ளி விவரங்களை மறைத்தால் மக்கள் பீதியடையாமலும், சமூக ஆர்வலர்களின்  கேள்விகளில் இருந்து தப்பிக்கலாம் என்பதாலேயே விவரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அரசியல் கட்சி தலைவர்களும் ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்டால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்து விடும் என்பதாலும், அந்த பிரச்சனை வருவதை தடுக்கும் பொருட்டே  இணையதளத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: