சிலியில் பரிதாபம் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி மாரடைப்பில் 2 பேர் பலி

சாண்டியகோ:  சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 பேர் மாரடைப்பால்  இறந்தனர்.உலகளவில் பூகம்பத்தால் அதிகம் பாதிக்கக் கூடிய நாடுகள் பட்டியலில் சிலியும் உள்ளது. இந்நாட்டில் நிலநடுக்கமும், எரிமலைகள் வெடிப்பதும் அடிக்கடி நடக்கும். இந்நிலையில், இந்நாட்டில் நேற்று அதிகாலை நிலநடுக்கம்  ஏற்பட்டது. இது, ரிக்டேர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது.  கோகியும்போவில் இருந்து தெற்மேற்கே 15 கிமீ தொலைவில் 53 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. வால்பாரைஸ்கோ, ஹிக்கின்ஸ் மற்றும் தலைநகரான சாண்டியகோ பகுதிகளில் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கின.

பொதுமக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.சண்டியகோவில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள கடற்கரை பகுதிகளான கோகியும்போ, செரினா பகுதிகளில் இருந்து சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு  வெளியேற்றப்பட்டனர். பின்னர், சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. கோகியும்போவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக மாரடைப்பு தாக்கி, வயதான ஆணும், பெண்ணும் இறந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: