அரசியல் மோதலுக்கு இடையே ரபேல் விமான நிறுவனத்துக்கு 34,000 கோடி தந்தது அரசு

புதுடெல்லி: ரபேல் போர் விமானம் தொடர்பாக அரசியலில் கடும் மோதல் வெடித்து வரும் நிலையில், ஒப்பந்தத்தின் 50 சதவீத பணத்தை மத்திய அரசு ஏற்கனவே செலுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து ₹59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016ல் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது, இதற்கான  ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். இந்த ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரராக அனில் அம்பானி நிறுவனம் சேர்க்கப்பட்டதும் சர்ச்சையாகி  உள்ளது.

இந்நிலையில், ரபேல் ஒப்பந்தத்தின் படி, ₹59,000 கோடியில் தற்போது வரை 50 சதவீத பணத்தை மத்திய அரசு செலுத்திவிட்டதாக பாதுகாப்பு துறை தகவல்கள் வெளியாகி உள்ளன. 2016 செப்டம்பரில் ஒப்பந்தம்  கையெழுத்தானதும், முதல் தவணையாக 15 சதவீத பணமும், பின்னர் அடுத்தடுத்த தவணைகளில் ₹34,000 கோடி வரை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த தவணையாக ₹13,000 கோடி விரைவில் செலுத்தப்பட  இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.ஒப்பந்தத்தின்படி, வரும் நவம்பர் மாதம் முதல் 2022 ஏப்ரலுக்குள் 36 ரபேல் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இதில், முதல் கட்டமாக 4 விமானங்கள் வரும் செப்டம்பரிலேயே தரப்பட உள்ளதாக விமானப்படை  அதிகாரிகள் கூறி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: