×

பிக் பாஷ் டி20 லீக் சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில், சிட்னி சிக்சர்ஸ் அணி 79 ரன் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வென்றது.சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசியது. சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன் குவித்தது. ஜேம்ஸ் வின்ஸ்  அதிகபட்சமாக 75 ரன் (46 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஜார்டன் சில்க் 41, பிலிப் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பிரிஸ்பேன் பந்துவீச்சில் ஜோஷ் லேலர் 5 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் 18.1 ஓவரில் 98 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. பென் கட்டின் 28, பிரெண்டன் மெக்கல்லம் 27 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். ஜேம்ஸ் வின்ஸ் ஆட்ட  நாயகன் விருது பெற்றார். சிட்னி சிக்சர்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 8 போட்டியில் 14 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. சிட்னி சிக்சர்ஸ், மெல்போர்ன் ரெனகேட்ஸ் 10 போட்டியில் தலா 10  புள்ளிகளுடன் அடுத்த 2 இடங்களில் உள்ளன.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Big Bash T20 League Sidney Sixers Won Great , Big Bash, T20 League,
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு