நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது. தற்போதைய மத்திய அரசின் ஆட்சிகாலம் சில மாதங்களில் முடிவடையுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள்  தீவிர முயற்சி செய்து வருகின்றது. இந்நிலையில் எதிர்கட்சிகள் சார்பில் கொல்கத்தாவில் நேற்று 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் திரண்ட பிரமாண்ட மாநாட்டு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் கூட்டணியை வைக்கிறார்கள். நாம் 125 கோடி மக்களுடன் கூட்டணியை வைத்துள்ளோம்.

எந்த கூட்டணி பலம் வாய்ந்தது? கொல்கத்தா மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் செல்வாக்கு  கொண்டவர்களின் வாரிசு அல்லது அவர்களது சொந்த குழந்தைகளை அரசியலில் வளர்க்க முயற்சி செய்பவர்கள்.அவர்கள் ஒன்றாக இணைகிறார்கள் என்றார். பணக்காரர்களின் கூட்டணியாகும். மாமன், மச்சான் கூட்டணியாகும். ஊழல், எதிர்மறை, உறுதியற்றநிலை, சமத்துவமில்லாத கூட்டணியாகும் என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான  8 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைச்சாமி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: