சுகாதாரமில்லாத துரந்தோ ரயில்: அதிர்ச்சி ஏற்படுத்திய சர்வே

சென்னை: சுகாதாரமில்லாமல் இயக்கப்படும் ரயில்கள் குறித்து பயணிகளிடம் நடத்திய சர்வேயில் துரந்தோ ரயிலுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. சுகாதாரமான ரயிலில் சகாப்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சுகாதாரமாக மக்கள் பயணம் செய்ய, தூய்மையாக உள்ள 2018ம் ஆண்டுக்கான ரயில் சர்வே பிரிமியம், நான் பிரிமியம் என 210 ரயில்களில் நடத்தப்பட்டது. அதில் முக்கியமாக ரயிலில் உள்ள கழிவறைகள், இருக்கைகளின் சுத்தம், பெட்களின் பராமரிப்பு குறித்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளிடம் பல்வேறு கேள்விகளின் மூலம் நேரடியாக சர்வே மேற்கொள்ளப்பட்டது. ரயில்வேத்துறையில் இந்த சர்வே முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது.  கழிவறைகளின் தூய்மை, தூய்மை செய்பவர்களின் பணிகள், பெட் எப்படி சுத்தம் செய்யப்படுகிறது, குப்பைத்தொட்டிகள் சரியாக வைக்கப்படுகிறதா என்ற கேள்விகளை கொண்ட படிவத்திற்கு பயணிகள் மதிப்பெண் வழங்கும் வகையில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. அதில், 1000 மதிப்பெண்ணிற்கு புனே முதல் செகந்திராபாத் வரை செல்லும் சகாப்தி ரயிலுக்கு 916, ஹவுரா-ராஞ்சி சகாப்தி ரயிலுக்கு 914, சென்னை சென்ட்ரல்- மைசூர் சகாப்தி ரயிலுக்கு 906 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு முதல் 3 இடத்தை பிடித்துள்ளது.

இதில், துரந்தோ ரயில்கள் மும்பை-நாக்பூர் 462, அலகாபாத்-டெல்லி 520, சாரி ரோகிலா-ஜம்மு தவி 543, என கடைசி இடத்தை பிடித்துள்ளன. இந்த சர்வே ரயில்வே துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால், இது குறித்த அறிவிப்புகள் இன்னும் ரயில்வே இணையதளங்களில் வெளியிடவில்லை. மீண்டும் சர்வே மேற்கொள்ள முடிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,’கழிவறைகளை சுத்தம் செய்வது, படுக்கைகள் பராமரிப்பு என்பது சற்று சிரமமான காரியம் தான். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஒவ்வொரு கழிவறையும் சராசரியாக 60 முறை பயன்படுத்தப்படுகிறது. பலவகைப்பட்ட மக்கள் பல வகையில், பல்வேறு முறைகளில் கழிவறையை கையாளுகின்றனர். இதனால் அதனை சுத்தம் செய்வதிலும், சுத்தமாக வைத்துக்கொள்வதிலும் சற்று சிரமம் உள்ளது’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: