ரபேல் போர் விமான பேரம் பற்றி நாடாளுமன்றக்குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும்: மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ரபேல் போர் விமான பேரம் பற்றி நாடாளுமன்றக்குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எந்த கேள்விக்கும் பிரதமர் மோடி நேரடியாக பதில் சொல்வதில்லை. போர் விமானம் 41% அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் வாதங்கள் ஆங்கிலப் பத்திரிகை கட்டுரையால் வீழ்த்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு நியாயமான விளக்கத்தை மோடி அரசு அளிக்க மறுக்கிறது.

நாடாளுமன்றத்துக்கும், உச்சநீதிமன்றத்துக்கு தகவல் சொல்லாமல் மூடி மறைத்தது அடாவடித்தனமான செயல். பிரான்சில் இருந்து போர் விமானம் வாங்கியதில் இமாலய ஊழல் நடந்துள்ளது. பிரதமர் மோடி தன்னிச்சையாக செயல்பட்டு மோசமான முறைகேடுகளுக்கு வித்திட்டுள்ளார். ஆங்கிலப்பத்திரிக்கையின் புலனாய்வு கட்டுரைக்கு உரிய விளக்கத்தை மத்திய அரசு தரவில்லை. ஏற்கனவே பதில் சொல்லப்பட்டுவிட்டது என பூசிமெழுகிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றுவதை பிரதமர் மோடி கைவிட வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் பிரதமரை விட திமுக உள்பட எதிர்க்கட்சிகளுக்கு அதிக அக்கறை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: