ரபேல் ஒப்பந்த தொகையை செலுத்திய மத்திய அரசு...... நவம்பரில் இந்தியாவிடம் விமானங்களை ஒப்படைக்க திட்டம்

டெல்லி: கடுமையான சர்ச்சைகளை கிளப்பிய  ரபேல் விமானங்களுக்கான தொகையில் பாதியளவு செலுத்தப்பட்டு விட்டது என்றும், வரும் அக்டோபர் மாதம் முதல் நான்கு விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பாதுகாப்புத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016ம் ஆண்டில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2022ம் ஆண்டிலேயே தயாராகும் என்று கூறப்படுகிறது.

2019 நவம்பர் துவங்கி 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து ரபேல் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கான ரூ.59,000 கோடியில் 50 சதவீதம் தொகையான ரூ.34,000 கோடியை இந்தியா, பிரான்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளது. மற்றொரு தவணையாக ரூ.13,000 கோடி இந்த ஆண்டில் செலுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதித் தவணை அனைத்து விமானங்களும் ஒப்படைக்கும்போது செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: